விசாரணைக்காக தேடப்படும் மூவர் தலைமறைவு ; பொதுமக்களின் உதவியை கோரும் பொலிஸார்
விசாரணையொன்றுக்காகத் தேடப்பட்டு வரும் மூன்று சந்தேக நபர்களைக் கைது செய்வதற்கு பொதுமக்களின் உதவியை பொலிஸார் கோரியுள்ளனர்.
மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினரால் முன்னெடுக்கப்படும் விசாரணையொன்றுடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்களே இவ்வாறு தேடப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சந்தேக நபர்கள் தற்போது தங்களது வசிப்பிடங்களில் இருந்து தப்பிச் சென்று தலைமறைவாகியுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இவர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவின் பணிப்பாளரை 0718 592 167 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக தொடர்புகொண்டு தகவல்களை வழங்க முடியும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாரால் வெளியிடப்பட்ட தகவலின்படி, தேடப்பட்டு வரும் சந்தேக நபர்களில் இருவர் ராஜபக்ஷ பத்திரணகே ஹிமாலி செவ்வந்தி மற்றும் ராஜபக்ஷ பத்திரணகே தரிந்து ஜீவந்த எனவும், மற்றையவர் பத்தேகம பத்திரணகே விராஜ் நிமஷ்க எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் தொடர்பில் நம்பகமான தகவல்கள் கிடைத்தால் உடனடியாக பொலிஸாருக்கு அறிவிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.