ஞானசார தேரர் நாளை வரை விளக்கமறியலில்
முதலாம் இணைப்பு
பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்ட பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரை நாளை (5) வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அவரை நாளை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் ஞானசார தேரர் இன்று (4) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார்.
இரண்டாம் இணைப்பு
களுத்துறை பகுதியில் வைத்து நேற்று (03) கைது செய்யப்பட்ட பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

காவல்துறையினரால் நேற்றைய தினம் கைது செய்யப்பட்ட நிலையிலேயே, அவர் தொடர்பான மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக இன்றைய தினம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளார்.
பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில் கலகொட அத்தே ஞானசார தேரர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.