இலங்கை வந்த வெளிநாட்டு தம்பதிக்கு நேர்ந்த துயரம் ; தப்பிய உயிர்கள்
ஹிக்கடுவை கடற்கரையில் நீராடிக் கொண்டிருந்தபோது கடலின் பலத்த நீரோட்டத்தில் சிக்கிய இரு ரஷ்ய சுற்றுலாப் பயணிகள் பொலிஸாரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
நேற்று மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முதலுதவி
38 மற்றும் 40 வயதுடைய ரஷ்ய நாட்டைச் சேர்ந்த தம்பதியினரே இவ்வாறு கடல் நீரோட்டத்தில் சிக்கி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இதன்போது கடற்கரையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உயிர்காப்புப் பிரிவைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர்களான நசுர்தீன் மற்றும் குமார ஆகியோர் உடனடியாகச் செயற்பட்டு இருவரையும் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட இருவருக்கும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் முதலுதவி சிகிச்சைகளையும் வழங்கியுள்ளனர்.
பொலிஸ் உயிர்காப்புப் பிரிவினரின் விரைவான நடவடிக்கையால் இரு சுற்றுலாப் பயணிகளின் உயிர்களும் காப்பாற்றப்பட்டுள்ளன.