முல்லைத்தீவில் தொலைபேசி மோகத்தால் இரு இளம் பெண்களுக்கு நேர்ந்த கதி!
முல்லைத்தீவு பகுதியில் பேருந்தும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இரு இளம்பெண் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த விபத்து சம்பவம் இன்றையதினம் (05-04-2024) காலை புதுக்குடியிருப்பு குழந்தையேசு ஆலயத்திற்கு முன்பாகவுள்ள முல்லைத்தீவு பிரதான வீதியில் இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
விசுவமடுவில் இருந்து திருகோணமலை நோக்கிச் சென்ற தனியார் பேருந்து ஒன்றும், முல்லைத்தீவில் இருந்து ஒட்டுசுட்டான் நோக்கி சென்ற இரு யுவதிகள் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றும் முல்லைத்தீவு பிரதான வீதியில் நேருக்கு நேர் மோதுண்டு விபத்திற்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு பெண்களும் படுகாயமடைந்த நிலையில் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த விபத்து சம்பவத்தில் ஒட்டுசுட்டான் பகுதியை சேர்ந்த 23, 24 வயதுடைய பெண்களே காயமடைந்துள்ளனர்.
விபத்து சம்பவம் தொடர்பான முதற்கட்ட விசாரணையில் யுவதிகளின் விபத்திற்கு தொலைபேசி பாவனையே காரணம் என தெரியவந்துள்ளது.