லண்டன் தெருவில் அநாதரவான நிலையில் இலங்கையை ஆட்டிபடைத்த பெண் ஜனாதிபதி !
இலங்கையில் ஆட்டிபடைத்த முன்னாள் பெண் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா அம்மையார் லண்டன் தெருவில் அநாதரவாக தனித்து நடந்து செல்லும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
இலங்கை ஜனாதிபதியாக இருந்தபோது பெரும் படை பாதுகாப்பில் தமிழ் மக்களை ஆட்டிப்படைத்தவர் தான் இந்த சந்திரிக்கா , என்பது ஈழ்த தமிழர்கள் மறந்திருக்க வாய்ப்பில்லை.

பணம், பதவி, புகழ், அந்தஸ்து, அதிகாரம் நிலையில்லை
செம்மணி புதைகுழி விவகாரமும் சந்திரிக்க அம்மையாரின் ஆட்சிக்காலத்திலேயே நிகழ்த்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் காலம் மிகவும் கொடியது அது யாரையும் விட்டுவைக்காது எனும் தமிழ் முது மொழி பொய்துபோகவில்லை என சமூக வலைத்தள வாசிகள் முன்னாள ஜனாதிபதி சந்திரிக்காவின் இன்றைய நிலை தொடர்பில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

அன்று இலங்கையின் தலைவி. உலக அளவில் அறியப்பட்டவர் பதவி இழந்த பின் லண்டன் தெருவொன்றில் தன்னம் தனியாக யாரோவா நடந்து செல்கின்றார்.
இவ்வுலகில் பணம், பதவி, புகழ், அந்தஸ்து, அதிகாரம் என்பதெல்லாம் நிலையில்லை என்பதை காலம் அனைவருக்கும் காட்டிவிட்டெ அவர்கள் வாழ்வை முடிவுக்கு கொண்டுவரும் என்பதில் ஐயமில்லை.