இலங்கையில் வாகன விற்பனையில் வீழ்ச்சி; இறக்குமதியாளர்கள் கோரிக்கை
டித்வா புயலால் நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக, வாகன விற்பனையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் நேற்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அந்தச் சங்கத்தின் தலைவர் பிரசாத் மானகே இதனைத் தெரிவித்தார்.

இதன் போது அவர் மேலும் கூறுகையில் இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை மூன்று மாதங்களுக்குள் சுங்கத்தில் இருந்து விடுவித்துக் கொள்ளாவிடின் விதிக்கப்படும் அபராதக் கட்டணத்தை தளர்த்துமாறு அரசாங்கத்திடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
தற்போதைய மோசமான வானிலை மற்றும் பொருளாதாரச் சூழல் காரணமாக வாகன விற்பனை மந்தகதியில் உள்ளதால், இந்த அபராதச் சுமை இறக்குமதியாளர்களைப் பாதிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.