வவுனியாவில் மாணவனை தாக்கிய ஆசிரியை காப்பாற்ற முயற்சிக்கும் பாடசாலை அதிபர்!
கடந்த சில தினங்களுக்கு முன் வவுனியா - சுந்தரபுரம் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் 2ல் கல்வி பயிலும் மாணவனை ஆசிரியை தாக்கியதில் குறித்த மாணவன் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவ தினத்தன்று பாடசாலை முடிந்து வீட்டிற்கு வந்த சிறுவனின் கத்திலும் தலையிலும் அடிகாயங்கள் காணப்பட்டதை அடுத்து பெற்றோர் சிறுவனிடம் விசாரித்ததில் அவரது ஆசிரியை தாக்கியதாக தெரிவித்துள்ளான்.
இதனை தொடர்ந்து சிறுவனின் தந்தை குறித்த ஆசிரியைக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு சிறுவனை தாக்கியதற்கான காரணம் என்ன மற்றும் காலிற்கு கீழ் அடித்து இருக்கலாமே என்றும் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் பெற்றோர் பொலிஸில் குறித்த ஆசிரியை மீது முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.
இதேவேளை, ஆசிரியையால் தாக்கப்பட்ட சிறுவனுக்கு நீதி கிடைக்க விடாமல் ஆசிரியரை காப்பாற்ற பாடசாலையின் அதிபர் உள்ளிட குழுவினர் கடும் முயற்சியை எடுத்து வருதாக தெரியவருகின்றது.
மேலும், சிறுவனின் தந்தைக்கு அழுத்தமும் அச்சுறுத்தலும் தொடர்வதாக தகவல் வெளியாகியுள்ளன.