வவுனியாவில் பிள்ளையார் இடத்தில் புத்தர்; தொல்பொருள் திணைக்களம் அடாவடி!
யாழ்ப்பாணம் , திருகோணமலையை தொடர்ந்து , வவுனியா சமணங்குளம் கல்லுமலை பிள்ளையார் ஆலய வளாகத்தில் விகாரை அமைக்கும் பணியில் தொல்பொருள் திணைக்களம் ஈடுபட்டு வருகின்றமை தொடர்பில் அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
அண்மைக்காலமாக குறித்த பகுதியில் உள்ள பிள்ளையார் ஆலயத்தின் கட்டுமான பணிகளை மேற்கொள்ளவிடாது தொல்பொருள் திணைக்களம் தடுத்து வந்தது.

பிள்ளையார் புனரமைப்பை தடுப்பு
அதோடு குறிப்பிட்ட இடத்தில் சில ஆண்டுகளுக்கு முன் தொல்பொருள் பிரதேசம் என பெயர் பலகை இட்டிருந்ததோடு அங்கு உள்ள பிள்ளையார் ஆலயத்தில் பூசை வழிபாடுகளுக்கு மாத்திரமே அனுமதி வழங்கி இருந்தது.
அங்கிருந்த பிள்ளையார் ஆலயத்தின் கட்டுமான பணிகளையும் இடைநிறுத்தி இருந்ததோடு எவ்வித புனரமைப்பு பணிகளையும் மேற்கொள்ள விடாது தடை செய்திருந்தது.