கொடைக்கானலில் குணா குகையை விட ஆபத்தான பகுதி... எது தெரியுமா?
இந்தியாவில் உள்ள ‘மலைகளின் இளவரசி’ என்று அழைக்கப்படும் கொடைக்கானல் கடல் மட்டத்திலிருந்து சுமார் 7,000 அடி உயரத்தில் அமைந்துள்ள இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலா தளமாக உள்ளது.
கொடைக்கானலில் ஆண்டுதோறும் இதமான தட்ப வெப்பநிலை இருப்பதால் வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்தும் ஏாளமான சுற்றுலாப் பயணிகள் வருகைதந்து மகிழ்கின்றனர்.
கொடைக்கானலில் பிரையன்ட் பூங்கா, ரோஸ் கார்டன், கோக்கர்ஸ் வாக், குணா குகை உள்ளிட்ட பல சுற்றுலாத் தலங்கள் உள்ளன. இவற்றில் பேரிஜம் ஏரி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் உள்ளது.
இதனால் வனத்துறையினரின் அனுமதி பெற்ற பிறகே பேரிஜம் எரிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல முடியும். மோயர் பாய்ன்ட்டில் இருந்து 18 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது.
பேரிஜம் ஏரிக்கு செல்லும் வழியில் தொப்பித்தூக்கி பாறை, மதிகெட்டான் சோலை, அமைதி பள்ளத்தாக்கு உள்ளிட்ட வியூ பாய்ன்ட் மற்றும் பசுமை போர்த்திய மலைத் தொடர்கள் என இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்கலாம்.
இதேவேளை, பேரிஜம் ஏரிக்குச் செல்லும் வழியில் மூலிகைகள் நிறைந்துள்ள மிக முக்கியமான இடம்தான் மதிகெட்டான் சோலை. இந்த இடத்தை பல மர்மங்கள் நிறைந்த காடு என்றுகூட சொல்லலாம்.
115 ஹெக்டேர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள இந்த காட்டு பகுதியில் அப்படி என்ன இருக்கிறது என்பது மர்மமாகவே உள்ளது.
இந்த வனப்பகுதிக்குள் செல்ல யாருக்கும் அனுமதியில்லை. தடையை மீறி உள்ளே நுழைந்து வழி தெரியாமல் சென்ற பலர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.