குளிர்காலத்தில் சாப்பிட கூடாத உணவுகள்!
குளிர் காலத்தில் சூடான உணவுகளையும் , நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை சேர்த்து கொள்வதன் ஊடாக நம் உடலின் ஆரோக்கியத்தை பேணலாம். குளிர் காலம் ஆரம்பித்து விட்டாலே, ஜலதோசம், தும்மல் , காச்சல் இப்படி திடீரென பல தொற்று நோய்கள் நம்மை தாக்கும்.
அவற்றில் இருந்து நம்மை காத்துக்கொள்ள நாம் சரியான உணவு முறைகளை கையாள்வதன் ஊடாக அவற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ல முடியும்.

குளிர்ந்த பால், சாதம் மற்றும் ஐஸ்கிரீம்
குளிர்காலத்தில் சூடான மற்றும் பொரித்த உணவுகள் மீது நமக்கு அதீத விருப்பம் உண்டாகும் ஆனால் குளிர்கால சீசனில் உடல் நலனை பேண சில உணவு மாற்றங்கள் அவசியமாகும்.
குளிர்ந்த நிலையில் உள்ள பால், சாதம் மற்றும் ஐஸ்கிரீம் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.

இவை ஜீரண சக்தியை பலவீனப்படுத்தும் என்பதால், எப்போதும் புதிதாக சமைத்த சூடான உணவுகளையும், உடலுக்கு கதகதப்பை தரும் சூப் வகைகளையும் உட்கொள்ள வேண்டும்.
அதேபோல், உடல் எடை கூடும் என பயந்து நெய் போன்ற ஆரோக்கியமான கொழுப்புகளை தவிர்க்கக் கூடாது.

குளிர்காலத்தில் வாதம் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், சருமம் மற்றும் உட்புற உறுப்புகள் வறட்சியடையாமல் இருக்க உணவில் சிறிதளவு நெய் சேர்த்துக்கொள்வது அவசியம்.

அதேபோல பரோட்டா, சப்பாத்தி போன்ற உலர்ந்த உணவுகளை மட்டும் அதிகம் உண்ணாமல், நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை சேர்த்துக்கொள்வது செரிமானத்திற்கும் ஆரோக்கியத்திற்கும் சிறந்தது.
தக்க உணவு பழக்கங்களை கையாளவதன் மூலம் குளிர்கால நோய்களில் இருந்து நம்மைப் பாதுகாத்து கொள்ளலாம்.