தலைமுடியை புற்றுநோய் நோயாளிகளுக்கு தானம் செய்யும் 9 வயது இலங்கை சிறுவன் !
அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கை சிறுவன் ஒருவர் புற்றுநோய் நோயாளிகளுக்கு உதவும் திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளார்.
அவுஸ்திரேலியா பெர்விக் நகரில் உள்ள செயிண்ட் கேத்தரின் ஆரம்ப பாடசாலையில் 9 வயதான யெவின் கரியவாசம் கல்வி கற்று வருகிறார். 9 வயதான யெவின் கரியவாசம் தன் தலைமுடியை புற்றுநோய் நோயாளிகளுக்கு தானம் செய்து வருகிறார்.

தனது தலைமுடியை தானம்
அத்துடன் விக்டோரியாவின் புற்றுநோய் கவுன்சிலுக்கு நிதி திரட்டுகிறார். புற்றுநோய் கவுன்சிலுக்கு எப்படி பயனுள்ள நன்கொடை அளிக்க முடியும் என்பதை தன் பெற்றோர் தனக்கு வழிகாட்டியதாக யெவின் சுட்டிக்காட்டியுள்ளார்.
புற்றுநோய் இல்லாத எதிர்காலத்திற்காக புற்றுநோய் கவுன்சிலை ஆதரிக்க தனது தலைமுடியை தானம் செய்யத் தயாராக இருப்பதாக அவர் கூறியுள்ளார். தற்போது இரண்டு ஆஸ்திரேலியர்களில் ஒருவர் தங்கள் வாழ்நாளில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் யெவின் தனது தலைமுடியை வெட்டி தேவைப்படும் சிறுவர்களுக்கு தானம் செய்வதாகவும், அவர்களுக்காக நிதி திரட்டுவதாகவும் குறிப்பிட்டார்.
புற்றுநோய் ஆராய்ச்சியை ஆதரிக்கவும், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவுஸ்திரேலியர்களுக்கு அத்தியாவசிய சேவைகளை வழங்கவும் இந்த நிதியில் சேரவும் 9 வயதான யெவின் கரியவாசம் மக்களிடம் உதவி கோரியுள்ளார்.