இலங்கையில் தீவிரமாக தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி... டுபாயில் சிக்கினர்!
இலங்கையில் தேடப்பட்டு வந்த பாதாள உலகக் குழு உறுப்பினரான "மன்னா ரமேஷ்" டுபாயில் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பாதுகாப்பு தரப்பினருக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த சந்தேக நபரை இலங்கைக்கு அழைத்து வர பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று டுபாயிக்கு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை பொலிஸாரால் தேடப்பட்டு வந்த "மன்ன ரமேஷ்", அவிசாவளை மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் இடம்பெற்ற மனிதப் படுகொலைகள் உட்பட பல குற்றச் செயல்களில் ஈடுபட்டு டுபாயில் தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபரை இலங்கையிடம் ஒப்படைக்குமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் சர்வதேச பொலிஸ் பிரிவின் ஊடாக டுபாய் பொலிஸாரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.