சுற்றுலா வந்த பெண்ணை கூட்டாக சேர்ந்து சித்திரவதை செய்த கும்பல்... நாட்டையே உலுக்கிய சம்பவம்
இந்தியாவில் சுற்றுலாப் பயணி ஒருவரைக் கூட்டு பாலியல் துஷ்பிரயோகம் செய்து அவரது கணவர் மீது தாக்கிய சம்பவம் ஒன்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இச்சம்பவம் தொடர்பில் கடந்த சனிக்கிழமையன்று, 4 பேர் கைது செய்யப்பட்டதாகவும் மேலும் நால்வரைத் தேடி வருவதாகவும் பொலிஸார் அறிவித்தனர்.
இதேவேளை குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் தன் கணவருடன் கண்ணீர் காணொளி வெளியிட்டிருப்பது ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ளது. காயங்களுடன் பெண் பதிவிட்ட காணொளி நாட்டுக்கே பெரும் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்ந்தியாவில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஸ்பெயினைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர் கணவர் கண்ணெதிரே கூட்டுப் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.
நாட்டுக்கே களங்கத்தை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் நான்கு பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ள நிலையில், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படுமா? என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.
பிரேசிலில் பிறந்த ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த குறித்த பெண்ணும் இவரது கணவரும் பைக்கில் உலகை சுற்றும் சாதனை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 5 ஆண்டுகளில் 66 நாடுகளுக்கு மோட்டார் சைக்கிளில் பயணம் செய்துள்ளனர்.
இவ்வாறான நிலையில் கடந்த மார்ச் 1ஆம் திகதி இரவு, அவர்கள் தும்கா மாவட்டத்தில் உள்ள குர்மஹாட் என்ற சிறிய கிராமத்தில் சாலையில் இருந்து சிறிது தொலைவில் ஒரு கூடாரம் அமைத்து உறங்கியுள்ளார்.
அப்போது அங்கு வந்த சில இளைஞர்கள் கூடாரத்திற்குள் நுழைந்து இருவரையும் தாக்கியதோடு பெண்ணை பாலியல் வல்லுறவு செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.
இச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட அவர்கள் இருவரும் தட்டுத் தடுமாறி அரை மயக்கத்துடன் சாலைக்கு வந்துள்ளனர். பிறகு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸாரிடம் நடந்ததைக் கூற, அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
சம்பவம் தொடர்பில் தகவலறிந்து வந்த பொலிஸ் உயர் அதிகாரிகள் அவர்களிடம் வாக்குமூலம் பெற்று இரவோடு இரவாக குற்றவாளிகளில் ஒருவரைப் பிடித்தனர்.
அவரிடம் விசாரணை நடத்தியதில், மற்ற குற்றவாளிகளின் அடையாளமும் தெரியவந்தது. இதுவரை 4 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். மற்றவர்களும் விரைவில் கைது செய்யப்பட்டுவார்கள் என தெரிவித்துள்ளனர்.