கபில சந்திரசேன பிணை சர்ச்சை ; போலி உறவினர்கள் கைது

SriLankan Airlines Colombo Crime Court of Appeal of Sri Lanka Kapila Chandrasena
By Sahana May 07, 2026 04:58 PM GMT
Report

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவுக்கு பிணை வழங்குவதற்காக, அவரது உறவினர்கள் எனப் பொய்க்கூறி முன்னிலைப்பட்ட இருவரை எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

யுனிசெப் வரவேற்ற வரலாற்று முடிவு ; இலங்கையில் சிறுவர் பாதுகாப்புக்கு புதிய திருப்பம்

யுனிசெப் வரவேற்ற வரலாற்று முடிவு ; இலங்கையில் சிறுவர் பாதுகாப்புக்கு புதிய திருப்பம்

கபில சந்திரசேனவின் பிணை நிபந்தனைகளின்படி, அவரது நெருங்கிய உறவினர்கள் மூவர் ஆள் பிணை வழங்க வேண்டியிருந்தது. இதற்காக உறவினர்களாக முன்னிலைப்படுவதற்குச் சந்தேக நபர்கள் தலா 15,000 ரூபாயைப் பணமாகப் பெற்றுக்கொண்டுள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.

பிணை நிபந்தனைகளை மீறி நீதிமன்றத்தின் நம்பிக்கையைச் சிதைத்துள்ளமையால், கபில சந்திரசேனவை மீண்டும் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறும் கொழும்பு பிரதான நீதவான் இன்று உத்தரவிட்டார்.

கபில சந்திரசேன பிணை சர்ச்சை ; போலி உறவினர்கள் கைது | Kapila Chandrasena Bail Fake Relatives Arrested

ஏர்பஸ் விமானக் கொள்வனவில் இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கபில சந்திரசேனவை, 5 இலட்சம் ரூபாய் ரொக்கப் பிணை மற்றும் மூன்று நெருங்கிய உறவினர்களின் தலா 100 இலட்சம் ரூபாய் ஆள் பிணையில் விடுவிக்க நீதவான் அசங்க எஸ். போதரகம கடந்த 5ஆம் திகதி உத்தரவிட்டிருந்தார்.

இதன்படி, நேற்று பிணைப் பணத்தைச் செலுத்துவதற்காக மூவர் நீதிமன்றத்திற்கு வந்திருந்தனர். அவர்களில் இருவர் மீது சந்தேகம் ஏற்பட்டதையடுத்து, நீதிமன்ற ஊழியர்கள் வழங்கிய புகாரின் அடிப்படையில் கேசல்கவத்தை பொலிஸாரால் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

தாங்கள் கபில சந்திரசேனவை யாரென்று அறியோம் என்றும், 15,000 ரூபாய் பணத்தைப் பெற்றுக்கொண்டே பிணையாளர்களாக முன்னிலைப்பட்டதாகவும் அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

தென்னிலங்கையில் தொடரும் இணைய நிதி மோசடி ; மீண்டும் சிக்கிய வெளிநாட்டு கும்பல்

தென்னிலங்கையில் தொடரும் இணைய நிதி மோசடி ; மீண்டும் சிக்கிய வெளிநாட்டு கும்பல்

அத்துடன், அவர்களுக்கு நிரந்தரத் தொழில் அல்லது வருமான வழி எதுவுமில்லை என்பதும் விசாரணையில் அம்பலமானது. இதனையடுத்து, புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் உள்ள சாஞ்சிஆராச்சி வத்தை பகுதியைச் சேர்ந்த அந்த இருவரையும் எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

அத்துடன், இவர்கள் பிணைக்காக கிராம உத்தியோகத்தர் சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்ட விதம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, பிணை நிபந்தனைகளை மீறியுள்ளமையால் கபில சந்திரசேனவைக் கைது செய்வதற்கான பிடியாணை உத்தரவை, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் கோரிக்கையை ஏற்று நீதவான் இன்று பிறப்பித்தார்.

அஸ்வெசும திட்டம் இரட்டைப் பணம் சர்ச்சை ; நலன்புரி நன்மைகள் சபை விளக்கம்

அஸ்வெசும திட்டம் இரட்டைப் பணம் சர்ச்சை ; நலன்புரி நன்மைகள் சபை விளக்கம்

மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US