தென்னிலங்கையில் தொடரும் இணைய நிதி மோசடி ; மீண்டும் சிக்கிய வெளிநாட்டு கும்பல்

CID - Sri Lanka Police Gampaha China Crime
By Sahana May 07, 2026 04:13 PM GMT
Report

கம்பஹா வெலிசர இடைத்தங்கல் முகாமிலிருந்து தப்பியோடி, இணையம் ஊடாக சட்டவிரோத நிதி மோசடிகளில் ஈடுபட்டு வந்த 30 வெளிநாட்டவர்களை பொலிஸார் இன்று (07) கைது செய்துள்ளனர்.

விஜய்க்கு பதவிப்பிரமாணம் ; ஆளுநர் மாளிகைக்கு வெளியே TVK ஆதரவாளர்கள் போராட்டம்

விஜய்க்கு பதவிப்பிரமாணம் ; ஆளுநர் மாளிகைக்கு வெளியே TVK ஆதரவாளர்கள் போராட்டம்

பொரலஸ்கமுவ, 10ஆம் மைல்கல் பகுதியில் வாடகைக்கு எடுக்கப்பட்ட கட்டிடமொன்றில் தங்கியிருந்த போதே, கல்கிஸ்ஸை பிராந்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தால் இவர்கள் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலதிக விசாரணை

கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்களில் இரண்டு யுவதிகள் உட்பட 21 சீனர்கள் மற்றும் ஒரு யுவதி உட்பட 9 வியட்நாமியர்கள் அடங்குவதாக பொலிஸார் கூறினர்.

தென்னிலங்கையில் தொடரும் இணைய நிதி மோசடி ; மீண்டும் சிக்கிய வெளிநாட்டு கும்பல் | Illegal Financial Sri Lanka Foreign Gang Caught

சந்தேக நபர்களிடமிருந்து 10 கணினிகள், 29 ஆப்பிள் வகை அலைபேசிகள் மற்றும் இணைய வசதிகளைப் பெறுவதற்கான உபகரணங்கள் உள்ளிட்ட பல பொருட்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதேபோன்ற குற்றச்சாட்டின் கீழ் கடந்த ஏப்ரல் 2ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் 152 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டிருந்ததுடன், அவர்களில் தற்போது கைது செய்யப்பட்டுள்ள இந்த 30 பேரும் உள்ளடங்கியிருந்தனர்.

நீதிமன்ற உத்தரவின் பேரில் வெலிசர இடைத்தங்கல் முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போதே, அங்கிருந்து தப்பிச் சென்று மீண்டும் இவ்வாறான மோசடிகளில் ஈடுபட்ட நிலையில் இவர்கள் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கல்கிஸ்ஸை பிராந்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் நிலையப் பொறுப்பதிகாரிக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

பொரலஸ்கமுவ பகுதியில் உள்ள இருமாடிக் கட்டிடத்தின் மேல் தளத்தை மாதந்தோறும் 15 இலட்சம் ரூபாய் வாடகைக்கு எடுத்து, இவர்கள் இந்த மோசடியை முன்னெடுத்து வந்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மொழிபெயர்ப்பாளர் ஒருவரின் உதவியுடன் நடத்தப்பட்ட விசாரணையில், இவர்கள் சில நாட்களுக்கு முன்னரே இந்தப் பகுதிக்கு வந்துள்ளமை கண்டறியப்பட்டது.

கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்கள் எவரிடமும் விசா அல்லது கடவுச்சீட்டுகள் இருக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

கல்கிஸ்ஸை பிராந்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழ் செம்மணியில் நான்கு குழந்தைகளின் என்பு கூடுகள் அடையாளம்

யாழ் செம்மணியில் நான்கு குழந்தைகளின் என்பு கூடுகள் அடையாளம்

மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US