அஸ்வெசும திட்டம் இரட்டைப் பணம் சர்ச்சை ; நலன்புரி நன்மைகள் சபை விளக்கம்

Sri Lanka Sri Lanka All Party Government Sri Lanka Prevention of Terrorism Act Sri Lankan Schools Aswasuma
By Sahana May 07, 2026 04:37 PM GMT
Report

அஸ்வெசும (Aswesuma) திட்டத்தின் கீழ் ஏப்ரல் மாதத்திற்கான கொடுப்பனவுகள் இருமுறை வழங்கப்பட்டதாகப் பரவி வரும் தகவல்கள் தொடர்பில் நலன்புரி நன்மைகள் சபை விளக்கமளித்துள்ளது.

தென்னிலங்கையில் தொடரும் இணைய நிதி மோசடி ; மீண்டும் சிக்கிய வெளிநாட்டு கும்பல்

தென்னிலங்கையில் தொடரும் இணைய நிதி மோசடி ; மீண்டும் சிக்கிய வெளிநாட்டு கும்பல்

தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டுக்கு முன்னதாக அஸ்வெசும பயனாளிகளுக்கு ஏப்ரல் மாதக் கொடுப்பனவுகளை வழங்குவதே சபையின் நோக்கமாக இருந்தது. இதற்கமைய, முதலாம் மற்றும் இரண்டாம் கட்டப் பயனாளிகளுக்கான கொடுப்பனவு 2026.04.10 அன்று வழங்கப்பட்டது.

சாதாரண கொடுப்பனவுகளுக்கு மேலதிகமாக, மத்திய கிழக்கின் போர்ச் சூழலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் பின்வரும் விசேட புத்தாண்டு கொடுப்பனவுகளை வழங்கத் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

அஸ்வெசும திட்டம் இரட்டைப் பணம் சர்ச்சை ; நலன்புரி நன்மைகள் சபை விளக்கம் | Ashwesuma Scheme Double Payment Controversy

மிகவும் வறிய குடும்பங்களுக்கு - 7,500 ரூபாய். வறிய குடும்பங்களுக்கு - 5,000 ரூபாய்.

பாதிப்புக்குள்ளாகக்கூடிய நிலையிலுள்ள குடும்பங்களுக்கு - 2,500 ரூபாய். ஒருங்கிணைந்த நலன்புரி நன்மைகள் தகவல் அமைப்பின் ஊடாக மாதத்திற்கு இருமுறை கொடுப்பனவுகளைச் செலுத்த இயலாது என்பதால், இந்த விசேட புத்தாண்டு நிவாரணக் கொடுப்பனவை கணினி முறைமைக்கு வெளியகமான (Manual Slip files) முறையில் வழங்கச் சபை நடவடிக்கை எடுத்தது.

இதன்போது, சுமார் 17 இலட்சம் குடும்பங்களுக்கான ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு, 90,000 கோப்புகளைக் கொண்ட தொகுதிகளாக (SLIP files) இலங்கை வங்கிக்கு அனுப்பப்பட்டன.

அங்கு ஏற்பட்ட ஒரு தவறு காரணமாக, ஒரு கோப்பு (Slip file) இருமுறை தரவேற்றப்பட்டது. இதன் காரணமாக வறிய குடும்பங்கள் பிரிவைச் சேர்ந்த சிலருக்கு இரட்டைக் கொடுப்பனவு (Double Payment) வழங்கப்பட்டமை கண்டறியப்பட்டது.

உடனடியாகச் செயற்பட்ட நலன்புரி நன்மைகள் சபை, குறித்த கொடுப்பனவுகளை இடைநிறுத்தியதுடன், மேலதிகமாகச் செலுத்தப்பட்ட தொகையை மீண்டும் சபையின் வங்கி கணக்கில் வைப்பிலிடுமாறு வங்கிகளுக்கு அறிவுறுத்தியது.

அஸ்வெசும திட்டம் இரட்டைப் பணம் சர்ச்சை ; நலன்புரி நன்மைகள் சபை விளக்கம் | Ashwesuma Scheme Double Payment Controversy

இருப்பினும், இந்தத் தடையுத்தரவு பிறப்பிக்கப்படுவதற்கு முன்னதாக 49,759 பயனாளிகள் தமது கணக்குகளில் இருந்து பணத்தை மீளப் பெற்றுள்ளனர்.

இவ்வாறு மேலதிகமாகப் பெறப்பட்ட 248,795,000 ரூபாய் தொகையை, அவர்களின் மே மாத அஸ்வெசும கொடுப்பனவில் இருந்து மீளப் பெற்றுக்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தத் தவறு காரணமாக அரசாங்கத்திற்கு எவ்வித நிதி இழப்போ அல்லது முறைகேடோ ஏற்படவில்லை என நலன்புரி நன்மைகள் சபை சுட்டிக்காட்டியுள்ளது.

அவசரத் தேவை கருதி கணினி முறைமைக்கு வெளியகமான முறையில் கொடுப்பனவுகளை மேற்கொண்டமையே இதற்குப் பிரதான காரணம் எனத் தெரிவித்துள்ள சபை, மேலதிகப் பணத்தை மீளப் பெறும் நடவடிக்கைகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

யாழ் செம்மணியில் நான்கு குழந்தைகளின் என்பு கூடுகள் அடையாளம்

யாழ் செம்மணியில் நான்கு குழந்தைகளின் என்பு கூடுகள் அடையாளம்

மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US