சர்வதேச அரங்கில் மிளிரும் இலங்கை விஞ்ஞானி ; தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு பெருமை
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தைச் சேர்ந்த கலாநிதி ஜே. அஜித் தம்பூ (Dr. J. Ajith Thamboo), 2026ஆம் ஆண்டுக்கான உலகின் முன்னணி 2 சதவீத விஞ்ஞானிகள் பட்டியலில் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளார்.
தலையில் 14 தையல்கள் ; உயிருக்கு அச்சுறுத்தல் எனக் கூறும் சத்தரதன தேரர் ; ஜனாதிபதியிடம் அவசரக் கோரிக்கை
அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்துடன் இணைந்து எல்சேவியர் (Elsevier) நிறுவனம் வெளியிடும் உலகளாவிய விஞ்ஞானிகள் தரவுத் தொகுப்பில் இவரது பெயர் இடம்பெற்றுள்ளமை, அவரது ஆய்வுப் பணிகளுக்குக் கிடைத்துள்ள முக்கியமான சர்வதேச அங்கீகாரமாகக் கருதப்படுகிறது.

கலாநிதி ஜே. அஜித் தம்பூ, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சிவில் பொறியியல் துறையில் சிரேஷ்ட விரிவுரையாளராகவும், அத்துறையின் தலைவராகவும் பணியாற்றி வருகின்றார்.
பேராதனைப் பல்கலைக்கழகத்தில் சிவில் பொறியியலில் முதல் வகுப்பு சிறப்புப் பட்டம் பெற்ற இவர், அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் (QUT) கலாநிதிப் பட்டத்தையும் பெற்றுள்ளார்.
கட்டமைப்பு பொறியியல், கட்டுமானப் பொருட்கள், கான்கிரீட் தொழில்நுட்பம் மற்றும் கட்டுமானங்களின் வலிமை தொடர்பான ஆய்வுகளில் இவர் விசேட கவனம் செலுத்தி வருகின்றார்.
குறிப்பாக, 2021ஆம் ஆண்டுக்கான ஆய்வுச் சாதனைகளுக்காக நான்கு ஜனாதிபதி ஆய்வு விருதுகளையும் இவர் பெற்றுள்ளார்.
இலங்கையின் பல்கலைக்கழகமொன்றில் பணியாற்றிக்கொண்டே சர்வதேச அறிவியல் ஆய்வுத்துறையில் இத்தகைய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கலாநிதி ஜே. அஜித் தம்பூவின் இந்தச் சாதனை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கும், இலங்கையின் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சித் துறைக்கும் பெருமை சேர்க்கும் முக்கியமான மைல்கல்லாக அமைந்துள்ளது.