தொடர்கதையாகும் ரகசிய உறவுகள் ;என்விடியா ceo தொடர்பில் அடுத்தடுத்து அதிர்ச்சி!
சீன உளவாளியாகச் சந்தேகிக்கப்படும் பெண்ணுடன் திருமணம் மீறிய உறவில் இருந்ததாக ஒப்புக்கொண்ட ஜென்சன் ஹுவாங் ( Nvidia CEO Jensen Huang) மேலும் மற்றொரு பெண்ணுடனும் திருமணம் மீறிய உறவில் இருந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஜென்சன் ஹுவாங் ( Jensen Huang), அமெரிக்காவைச் சோ்ந்த உலகின் முன்னணி சிப் தயாரிப்பு நிறுவனமான என்விடியாவின் தலைமைச் செயல் அதிகாரியாக (சிஇஓ) இருந்து வந்தார்.

சீன உளவாளி பெண்ணுடன் ரகசிய உறவு
சிங்கப்பூரைத் தலைமையிடமாகக் கொண்ட ‘மெகாஸ்பீட் இன்டா்நேஷனல்’ நிறுவனத்தின் முன்னாள் உயா் அதிகாரியான ஆலிஸ் ஹுவாங்குடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததை அண்மையில் ஒப்புக்கொண்டாா்.
இதனிடையே, சீன உளவாளியாகச் சந்தேகிக்கப்படும் பெண்ணுடனான தனிப்பட்ட உறவு தேச பாதுகாப்பு குறித்த கவலைகளை எழுப்பியதைத் தொடா்ந்து, என்விடியாவின் தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) ஜென்சன் ஹுவாங் வியாழக்கிழமை தனது பதவியை ராஜிநாமா செய்தாா்.
இதனைத் தொடர்ந்து, நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியான கோலெட் கிரெஸ் இடைக்கால சிஇஓ-ஆக நியமிக்கப்பட்டுள்ளாா்.
மேலும், ஆலிஸ் ஹுவாங் சீன அரசுக்கு நேரடியாகத் தகவல்களை வழங்கியதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடா்ந்து, அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் உத்தரவின்பேரில் அந்நாட்டு புலனாய்வு அமைப்பான எஃப்பிஐ (FBI) இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்த நிலையில், தனக்குக் கீழ் பணியாற்றும் என்விடியா நிறுவன அதிகாரி ஒருவருடனும் ஜென்சன் ஹுவாங் ( Jensen Huang)திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், இதுகுறித்த கேள்விக்கு என்விடியா நிறுவனமும் ஜென்சன் ஹுவாங்கும் ( Jensen Huang) பதிலளிக்க மறுத்து விட்டனர்.