LAUGFS எரிவாயு நுகர்வோருக்கு அதிர்ச்சி ; இன்று நள்ளிரவு முதல் புதிய விலைகள் அமுல்
சர்வதேச சந்தையில் திரவ பெட்ரோலிய வாயு (LPG) விலை அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, தமது வீட்டுப் பாவனை சமையல் எரிவாயு சிலிண்டர்களின் மீள்நிரப்பு விலைகளை அதிகரிப்பதற்கு லாஃப்ஸ் (LAUGFS) எரிவாயு நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
தலையில் 14 தையல்கள் ; உயிருக்கு அச்சுறுத்தல் எனக் கூறும் சத்தரதன தேரர் ; ஜனாதிபதியிடம் அவசரக் கோரிக்கை
இந்தத் திருத்தப்பட்ட புதிய விலைகள் இன்று (13) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரவுள்ளன.

இதற்கமைய, 12.5 கிலோகிராம் நிறையுடைய வீட்டுப் பாவனை எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை 1,775 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 4,965 ரூபாவாக இருந்த குறித்த சிலிண்டரின் புதிய விலை 6,740 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, 5 கிலோகிராம் நிறையுடைய வீட்டுப் பாவனை எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை 732 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி 1,988 ரூபாவாக இருந்த அதன் புதிய விலை 2,720 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.