சுவிட்சர்லாந்தில் குடியேற விரும்புவோருக்கு புதிய கட்டுப்பாடு
சுவிட்சர்லாந்தில் குடியேற விரும்பும் ஐரோப்பிய ஒன்றியப் பிரஜைகளுக்கு புதிய கட்டணங்களை அறிமுகப்படுத்த அந்நாட்டு அரசாங்கம் முன்மொழிந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தலையில் 14 தையல்கள் ; உயிருக்கு அச்சுறுத்தல் எனக் கூறும் சத்தரதன தேரர் ; ஜனாதிபதியிடம் அவசரக் கோரிக்கை
இதன்படி, சுவிட்சர்லாந்தில் குடியேறும் ஒவ்வொரு ஐரோப்பிய ஒன்றியப் பிரஜையும் 4,000 சுவிஸ் பிராங்குகளை கட்டணமாகச் செலுத்த வேண்டுமென முன்மொழியப்பட்டுள்ளது.

அதேவேளை, ஏற்கனவே சுவிட்சர்லாந்தில் வசிக்கும் ஐரோப்பிய ஒன்றியப் பிரஜைகளுடன் குடும்பமாக இணைந்து வாழ்வதற்காக அந்நாட்டுக்குச் செல்லும் வயது வந்த ஒவ்வொருவருக்கும் தலா 2,000 சுவிஸ் பிராங்குகள் கட்டணமாக அறவிடவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தக் கட்டண அறிமுகம் தொடர்பான முன்மொழிவு எதிர்வரும் டிசம்பர் மாதம் சுவிட்சர்லாந்து நாடாளுமன்றத்தின் மேலவையில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த முன்மொழிவு நடைமுறைக்கு வந்தால், சுவிட்சர்லாந்தில் குடியேறத் திட்டமிடும் ஐரோப்பிய ஒன்றியப் பிரஜைகள் மற்றும் அங்கு வசிக்கும் தமது குடும்ப உறுப்பினர்களுடன் இணைய விரும்புவோர் மேலதிக நிதிச் சுமையை எதிர்கொள்ள நேரிடலாம்.
எனினும், இது தற்போது முன்மொழிவு என்ற நிலையிலேயே உள்ளதுடன், நாடாளுமன்ற விவாதம் மற்றும் அடுத்தகட்ட தீர்மானங்களுக்குப் பின்னரே இதன் இறுதி நிலை தெளிவாகும்.