ஜேர்மனியில் இலங்கை முஸ்லிம் குடும்பத்துக்கு நேர்ந்த அவலம் ; தந்தையும் மகளும் நாடு கடத்தல்

Sri Lanka Germany World
By Sahana Nov 13, 2026 05:06 PM GMT
Report

ஜேர்மனியில் சுமார் எட்டு ஆண்டுகளாக வசித்து வந்த இலங்கையைச் சேர்ந்த Rouf குடும்பத்தின் நாடு கடத்தல் விவகாரம் அந்நாட்டில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.

தலையில் 14 தையல்கள் ; உயிருக்கு அச்சுறுத்தல் எனக் கூறும் சத்தரதன தேரர் ; ஜனாதிபதியிடம் அவசரக் கோரிக்கை

தலையில் 14 தையல்கள் ; உயிருக்கு அச்சுறுத்தல் எனக் கூறும் சத்தரதன தேரர் ; ஜனாதிபதியிடம் அவசரக் கோரிக்கை

குடும்ப உறுப்பினர்கள் பிரிக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட நாடு கடத்தல் நடவடிக்கைக்கு எதிராக மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றனர்.

Rouf குடும்பம் கடந்த 2018ஆம் ஆண்டு ஜேர்மனிக்குச் சென்றுள்ளது. அங்கு குடும்பத்தின் பிள்ளைகள் பாடசாலைகளில் கல்வி கற்று, ஜேர்மன் சமூகத்துடன் இணைந்து வாழ்ந்து வந்துள்ளனர்.

ஜேர்மனியில் இலங்கை முஸ்லிம் குடும்பத்துக்கு நேர்ந்த அவலம் ; தந்தையும் மகளும் நாடு கடத்தல் | Ordeal Faced By Sri Lankan Muslim Family Germany

குறிப்பாக, குடும்பத்தின் மூத்த மகளான Ramla உயர் கல்வியைத் தொடர்வதற்குத் தயாராகி வந்ததுடன், அவரது சகோதரர் பாடசாலை மாணவர் பிரதிநிதியாகவும் செயற்பட்டு வந்துள்ளார்.

இவ்வாறான சூழலில், குடும்பத்தை இலங்கைக்கு நாடு கடத்துவதற்கு எதிராக அப்பகுதியைச் சேர்ந்த மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். தங்களுடன் கல்வி கற்று வந்த நண்பர்களைப் பிரிக்க வேண்டாம் என மாணவர்கள் உருக்கமான கோரிக்கைகளையும் முன்வைத்திருந்தனர்.

எனினும், கடந்த ஒக்டோபர் 16ஆம் திகதி அதிகாலை அதிகாரிகள் குடும்பத்தின் வீட்டுக்குச் சென்று நாடு கடத்தல் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

இதன்போது குடும்பத்தின் தந்தையும் மூத்த மகள் Ramlaவும் இலங்கைக்கு அனுப்பப்பட்டதாக ஜேர்மன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து Leverkusen நகரில் பொதுமக்கள் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த ஒக்டோபர் 19ஆம் திகதி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 200 பேர் கலந்துகொண்டு குடும்பத்துக்கு ஆதரவாகக் குரல் எழுப்பியுள்ளனர்.

குடும்பத்துக்கு புதிய நம்பிக்கை

இந்நிலையில், குடும்பத்தின் எஞ்சிய உறுப்பினர்களான தாயையும் நான்கு சிறுவயதுக் குழந்தைகளையும் நாடு கடத்துவதற்கு எதிரான முயற்சிகளில் புதிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

நவம்பர் 11ஆம் திகதி வெளியான ஜேர்மன் ஊடகச் செய்திகளின்படி, தாயையும் நான்கு குழந்தைகளையும் அடுத்த 10 நாட்களுக்கு நாடு கடத்துவதில்லை என அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

இந்தக் காலப்பகுதியில் Leverkusen நகர நிர்வாகத்துடன் சுமுகமான தீர்வொன்றை எட்டுவதற்கான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையில், இலங்கையில் உள்ள தந்தை மற்றும் மகளின் வாழ்க்கைச் செலவுகளையும், ஜேர்மனியில் முன்னெடுக்கப்படும் சட்ட நடவடிக்கைகளுக்கான செலவுகளையும் சமாளிப்பதற்காக ஆதரவாளர்கள் நிதி திரட்டி வருகின்றனர்.

குடும்ப உறுப்பினர்கள் மீண்டும் ஒன்றிணைவதுடன், ஜேர்மனியில் தொடர்ந்து வாழ்வதற்கான வாய்ப்பைப் பெற்றுக்கொடுப்பதே ஆதரவாளர்களின் பிரதான நோக்கமாக உள்ளது.

எட்டு ஆண்டுகளாக ஜேர்மனியில் வாழ்ந்து வந்த ஒரு இலங்கை குடும்பம் நாடு கடத்தல் நடவடிக்கையால் பிரிக்கப்பட்டுள்ளமை அந்நாட்டில் மனிதாபிமானம், குடும்ப ஒற்றுமை மற்றும் குடியேற்றச் சட்டங்கள் தொடர்பான விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளது.

தாயும் நான்கு குழந்தைகளும் ஜேர்மனியில் தொடர்ந்து வாழ்வதற்கான வாய்ப்பைப் பெறுவார்களா? பிரிக்கப்பட்ட Rouf குடும்பம் மீண்டும் ஒன்றிணையுமா? என்ற எதிர்பார்ப்பு தற்போது பலரிடமும் எழுந்துள்ளது.

LAUGFS எரிவாயு நுகர்வோருக்கு அதிர்ச்சி ; இன்று நள்ளிரவு முதல் புதிய விலைகள் அமுல்

LAUGFS எரிவாயு நுகர்வோருக்கு அதிர்ச்சி ; இன்று நள்ளிரவு முதல் புதிய விலைகள் அமுல்

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Hannover, Germany

10 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், Mississauga, Canada

13 Nov, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Cinnamon Gardens, Colombo, Wimbledon, United Kingdom

06 Nov, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

12 Nov, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Greven, Germany, Münster, Germany

08 Nov, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, நீர்வேலி, Bussy-Saint-Georges, France

04 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, சென்னை, India, பரிஸ், France

10 Nov, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, Mississauga, Canada

10 Nov, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Greven, Germany, Münster, Germany, Nordwalde, Germany, High Wycombe, United Kingdom

29 Oct, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

06 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, சிட்னி, Australia

13 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Scarborough, Canada

06 Nov, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

04 Nov, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, கனடா, Canada

13 Nov, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கோனாவில்

13 Nov, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
மரண அறிவித்தல்

குப்பிளான், கனடா, Canada

10 Nov, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Oct, 2019
50ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பண்டத்தரிப்பு

25 Nov, 1976
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, புதுக்குடியிருப்பு, வவுனியா, செல்வபுரம்

11 Nov, 2018
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Paris, France, Toronto, Canada

10 Nov, 2026
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US