பாடசாலை வளாகத்தில் ரத்தக்கலரி ; சக மாணவர்களை கத்தியால் குத்திய உயர்தர மாணவன்

Anuradhapura Sri Lanka Police Investigation Hospitals in Sri Lanka Crime
By Sahana May 13, 2026 01:33 PM GMT
Report

அனுராதபுரம் மாவட்டத்தின் எப்பாவலை நகரிலுள்ள பிரதான அரச பாடசாலை ஒன்றில் இன்று (13) இடம்பெற்ற கத்திக்குத்துத் தாக்குதலில் ஐந்து மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.

விஜய் அரசின் முக்கிய நியமனம் ; நிதித்துறையை வழிநடத்த வருகிறார் சித்திக்

விஜய் அரசின் முக்கிய நியமனம் ; நிதித்துறையை வழிநடத்த வருகிறார் சித்திக்

காயமடைந்த மாணவர்கள் உடனடியாக எப்பாவலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இவர்களில் எவரின் நிலையும் கவலைக்கிடமாக இல்லை என தெரிவிக்கப்படுகிறது.

மேலதிக விசாரணை

தாக்குதலில் காயமடைந்தவர்கள் அனைவரும் குறித்த பாடசாலையில் 12ஆம் தரத்தில் தொழில்நுட்பப் பிரிவில் கல்வி பயிலும் மாணவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாடசாலை வளாகத்தில் ரத்தக்கலரி ; சக மாணவர்களை கத்தியால் குத்திய உயர்தர மாணவன் | A Level Student Stabs Fellow Students With Knife

இந்த தாக்குதலை மேற்கொண்டதாகக் கூறப்படும் மாணவரும் அதே பாடசாலையில் 12ஆம் தரத்தில் விஞ்ஞானப் பிரிவில் கல்வி கற்கும் மாணவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர், தாக்குதலை நடத்திய மாணவருக்கும் காயமடைந்த மாணவர் ஒருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறே இந்தச் சம்பவத்திற்குக் காரணமாக இருக்கலாம் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பழிவாங்கும் நோக்கில் இன்று காலை பாடசாலைக்குள் கூர்மையான ஆயுதத்துடன் வந்த மாணவர், மற்றொரு மாணவர் மீது தாக்குதல் நடத்தியதாகவும், அதனைத் தடுக்க முயன்ற மேலும் நான்கு மாணவர்கள் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தை அடுத்து, தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதத்துடன் குறித்த மாணவரை எப்பாவலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை எப்பாவலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மீன்பிடிக்கச் சென்ற இளைஞருக்கு நேர்ந்த துயரம் ; புதுமாப்பிள்ளை மரணம் குறித்து பொலிஸ் விசாரணை

மீன்பிடிக்கச் சென்ற இளைஞருக்கு நேர்ந்த துயரம் ; புதுமாப்பிள்ளை மரணம் குறித்து பொலிஸ் விசாரணை

1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US