கொழும்பில் முச்சக்கரவண்டியில் வந்து சடலத்தை வீசிச் சென்ற மர்மக் குழு
கொழும்பு, கொள்ளுப்பிட்டி – அல்பிரட் ஹவுஸ் அவென்யூ பகுதியில் பலத்த வெட்டுக்காயங்களுடன் காணப்பட்ட நபரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
கடந்த சனிக்கிழமை (21) இரவு முச்சக்கரவண்டியொன்றில் வந்த இனந்தெரியாத குழுவினர், குறித்த சடலத்தை அவ்விடத்தில் வீசிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்த கொள்ளுப்பிட்டி பொலிஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த நபர் யார், அவர் எவ்வாறு கொலை செய்யப்பட்டார் மற்றும் சடலத்தை அவ்விடத்தில் வீசிச் சென்றவர்கள் யார் என்பது தொடர்பில் இதுவரை மேலதிக தகவல்கள் வெளியாகவில்லை.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொள்ளுப்பிட்டி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.