WhatsApp ஒரே குழுவில் இனி 1,500 பேர் ; வாட்ஸ்அப்பின் புதிய வசதி அறிமுகம்
வாட்ஸ்அப் குழுக்களில் உறுப்பினர்களைச் சேர்ப்பதற்கான அதிகபட்ச வரம்பை 1,024 இலிருந்து 1,500 ஆக உயர்த்துவதற்கு புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் பயனர்களுக்கு இந்தப் புதிய வசதி படிப்படியாக அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றது.
இந்த மாற்றம் சாதாரண வாட்ஸ்அப் குழுக்கள் மற்றும் கம்யூனிட்டி குழுக்கள் ஆகிய இரண்டுக்கும் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், ஏற்கனவே இயங்கி வரும் குழுக்களிலும் புதிய வரம்புக்கு ஏற்ப கூடுதல் உறுப்பினர்களை இணைத்துக்கொள்ள முடியும்.
முன்னதாக 1,024 உறுப்பினர்களை மட்டுமே இணைக்க முடிந்த நிலையில், தற்போது மேலும் 476 பேரை ஒரே குழுவில் சேர்க்கும் வசதி கிடைத்துள்ளது.
இந்தப் புதிய மாற்றம் அதிக எண்ணிக்கையிலான உறுப்பினர்களுடன் தகவல்களைப் பகிர்ந்துகொள்ளும் குழு நிர்வாகிகளுக்கு பயனுள்ளதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.