பிள்ளையார் ஆலய சுற்றுச்சுவர் பொலிஸார் வற்புறுத்தலால் இடிப்பு
வவுனியா நெளுக்குளம் சந்தியில் அமைந்துள்ள பிள்ளையார் ஆலயத்தின் சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டுள்ளது. வீதி அபிவிருத்தி அதிகார சபையினரினால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டால் ஆலய வளாகமும் இடித்தழிக்கப்பட்டுள்ளது.
வர்த்தக நிலையங்களின் பெயர்ப்பலகைகள் , பேருந்து தரிப்பிடம் , முச்சக்கரவண்டிகள் தரிப்பிடம் ஆகியன அமைந்துள்ள பகுதியிலேயே பிள்ளையார் ஆலய வளாகம் காணப்படுகின்றது.
வீதி அபிவிருத்தி அதிகார சபை முறைப்பாடு
எனினும் பிள்ளையார் ஆலய வளாகத்தினை மாத்திரம் அகற்றுமாறு நெளுக்குளம் பொலிஸ் நிலையத்தில் வீதி அபிவிருத்தி அதிகார சபை முறைப்பாடு மேற்கொண்டுள்ளனர்.
அதற்கமைய விசாரணைகளை முன்னெடுத்த நெளுக்குளம் பொலிஸார் , ஆலய வளாகத்தினை அகற்றுமாறும் இல்லாவிடில் நீதிமன்றில் வழக்கு தாக்கல் மேற்கொள்ளப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனால் பொலிஸார் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அச்சத்தினால் ஆலய நிர்வாகத்தினால் ஆலய வளாகம் இடித்தழிக்கப்பட்டுள்ளது.