எவ்வித தடையுமின்றி வெடுக்குநாறி மலையில் இடம்பெற்ற மகா சிவராத்திரி வழிபாடுகள்
வவுனியா, நெடுங்கேணி, வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற மகா சிவராத்திரி விசேட பூஜைகள் எந்தவித குழப்பமுமின்றி அமைதியாக நடைபெற்றுள்ளதாக பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
கடந்த ஆண்டுகளில் வெடுக்குநாறிமலை ஆலயத்தில் சிவராத்திரி தின வழிபாடுகளில் இடையூறுகள் ஏற்பட்டதாகவும், பக்தர்களுக்கு எதிராக பொலிஸார் தாக்குதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதே நேரத்தில், பக்தர்களுக்குரிய குடிநீரை ஆலயப்பகுதிக்குள் கொண்டு செல்ல தடைகள் விதிக்கப்பட்டிருந்தன.
இம்முறை, தேவையான அனுமதிகள் மற்றும் கோரிக்கைகள் முறையாக செய்யப்பட்டதன் காரணமாக, எந்தவித தடையோ குழப்பமோ இல்லாமல் விசேட வழிபாடுகள் நடைபெற்று மக்களுக்கு சிறப்பான திருவிழா அனுபவம் வழங்கியது.