தமிழகத்தில் மூச்சிழந்த ஈழத்தின் குரல் சாந்தனின் வைரலாகும் கவிதை
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சாந்தன் கல்லீரல் பாதிப்பினால் சென்னையில் சிகிற்சை பெற்றுவந்த நிலையில் இன்றையதினம் உயிரிழந்த சம்பவம் ஈழ மக்களுக்கு பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்டு நாட்டுக்கு திருப்பி அனுப்ப மத்திய அரசாங்கம் அனுமதி அளித்த நிலையில், சாந்தன் உடல்நலக்குறைவால் தமிழகத்தில் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் மகன் வீடுவருவார் என யாழ்ப்பாணத்தில் காத்திருந்த சாந்தனின் தாயாருக்கு மகன் உயிரிழந்த சம்பவம் பேரதிச்சியாக உள்ளது. இந்நிலையில் சிறப்பு முகாமில் உள்ளபோது அவர் எழுதிய கவிதை சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சாந்தனின் கடைசி கவிதை
வன் செவிதான்....நின் செவி!
விடுதலைக்கு ஏங்கி யாம் பாடும் பாடல் உன்னை எட்டவில்லையா?
எப்படி எட்டும் சாளங்களை தகரத்தினால் அடைத்து விட்டல்லவா
நடமாட விட்டிருக்கின்றாய்...
இல்லை இல்லை உயிர்வாழ அனுமத்தித்திருக்கிறாய்....!
சிறையல்ல இது சிறப்பு முகாம்...