மின்சார சபையின் புதிய யோசனை ; 13.56% கட்டண உயர்வு
2026 ஆம் ஆண்டு இரண்டாம் காலாண்டுக்காக மின்கட்டணத்தை 13.56 சதவீதத்தால் அதிகரிக்க அனுமதி வழங்குமாறு இலங்கை மின்சார சபை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் வலியுறுத்தியுள்ளது.
மின்னுற்பத்திக்கான செலவு அதிகரிப்பு மற்றும் மின்பாவனைக்கான கேள்வி அதிகரிப்பு ஆகிய காரணிகளால் மின்கட்டணத்தை அதிகரிக்கும் யோசனையை முன்வைத்துள்ளதாக மின்சாரசபை குறிப்பிட்டுள்ளது.
இதற்கமைய கட்டணம் அதிகரிக்கப்பட்டால் வீட்டு பாவனை, மத தலங்கள், ஹோட்டல், அரச மற்றும் தனியார் துறைகளின் மின்கட்டணங்கள் உயரவடைய கூடும்.

உலக சந்தையில் நிலக்கரியின் விலை உயர்வடைந்துள்ளதாலும், தேசிய மட்டத்தில் செலவுகள் உயர்வடைந்துள்ளதாகலும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 1 ஆம் திகதி முதல் ஜூன் 30 ஆம் திகதி வரை மின்கட்டணத்தை 13.56 சதவீதத்தால் அதிகரிப்பதற்கு அனுமதிக்குமாறு மின்சார சபை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதற்கமைய புதிய கட்டணத் திருத்தத்துக்கு பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். மின்சார சபை இலாபமடைந்துள்ளது.
ஆகவே மின்கட்டணத்தை 13.56 சதவீதத்தால் அதிகரிப்பது முறையற்றது. ஒருடத்தில் ஒவ்வொரு காலாண்டும் மின்கட்டணத்தை அதிகரிப்பது சட்ட விரோதமானது.
மின்சார சபை தவறான செயலொழுங்கை உருவாக்க முயற்சிக்கிறது என மின்பாவனையாளர் சங்கம் அதிருப்பு வெளியிட்டுள்ளது.