யாழில் மகன் வரவுக்காய் காத்திருந்த தாயாருக்கு பேரதிர்ச்சி ; தமிழகத்தில் சாந்தன் காலமானார்
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டு தமிழகத்தின் சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சாந்தன் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்து வந்த போதும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.
சென்னை மருத்துவமனையில் மரணம்
கோமாநிலைக்கு சென்ற சாந்தனின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்து இருந்தநிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை சாந்தன் மரணம் அடைந்தார்.
சாந்தனுக்கு கடந்த ஜனவரி மாதம் 24 ஆம் திகதி உடல் நிலை பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயர் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது.
ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்து வந்த போதும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. கோமநிலைக்கு சென்ற சாந்தனின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்து இருந்தனர்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை சாந்தன் மரணம் அடைந்தாக தெரிவிக்கப்படுகின்றது.
கடைசிக் காலத்தை பிள்ளையுடன் கழிக்க வேண்டும்
அதேவேளை , கடந்த 32 ஆண்டுகளாக நான் என் பிள்ளையைப் பார்க்காமல் உள்ளேன். எனது கடைசிக் காலத்தை பிள்ளையுடன் கழிக்க வேண்டும் என்பதற்காகத்தான் எனது உயிரைப் பிடித்து வைத்திருக்கின்றேன். எனது வலது கண் பார்வை முழுவதும் போய் விட்டது.
இடது கண் பார்வையும் போவதற்குள் என் பிள்ளையை நான் பார்த்து விட வேண்டும். என் பிள்ளையை நான் பார்க்காவிட்டால் இனிமேலும் நான் உயிரோடு இருப்பதில் அர்த்தமில்லை என சாந்தனின் தாயார் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து இலங்கைக்கு சாந்தனை அனுப்ப இந்திய மத்திய அரசாங்கம் அனுமதி அளித்ததாக கடந்தவாரம் செய்திகள் வெளியாகியிருந்தது.
இந்நிலையில் , மகனின் வரவுக்காய் யாழ்ப்பாணத்தில் காத்திருக்கும் அவரது தாயார் , ஜனாதிபதி ரணில் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடமும் மகனை நாட்டுக்கு வரவழைக்க மனு கொடுத்திருந்த நிலையில், தமிழகத்தில் சாந்தன் உயிரிழந்துள்ளமை பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.