இந்திய சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து
யட்டியாந்தோட்டை காவல்துறை பிரிவுக்குட்பட்ட தணகொலவத்த பகுதியில், தனியார் சுற்றுலா பேருந்து ஒன்று உந்துருளியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று (20) மாலை 4.00 மணியளவில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து வீதியால் பயணித்துக்கொண்டிருந்த போதே விபத்து நேர்ந்துள்ளது.

நிலவும் கடும் மழை
இந்திய சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று எட்டியாந்தோட்டை, ஹக்பெல்லாவக்க பகுதியில் வீதியை விட்டு விலகி பள்ளத்தில் கவிழ்ந்து அங்கிருந்த வீடொன்றின் மீது விழுந்துள்ளது.
இதில் குறித்த வீட்டின் அருகே நின்றுக்கொண்டிருந்த பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
விபத்தில் காயமடைந்த மூன்று சிறுவர்கள் சிகிச்சைக்காக கரவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தில் உந்துருளியில் பயணித்தவர் காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தற்போது அந்தப் பகுதியில் நிலவும் கடும் மழை காரணமாக வீதி வழுக்கக்கூடிய நிலையில் காணப்படுவதால் இந்த விபத்து நேர்ந்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
எனவே காலநிலை மாற்றங்களால் வாகனங்களை கவனமாக செலுத்துமாறு காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.