ஆடி பௌர்ணமியில் உருவாகும் கேந்திர திருஷ்டி யோகம் ; இந்த ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது
ஜோதிடத்தின் படி, இரண்டு செல்வாக்குமிக்க கிரகங்கள் ஒருவருக்கொருவர் 4 ஆவது மற்றும் 10 ஆவது வீடுகளில் இருக்கும் போது கேந்திர திருஷ்டி யோகம் உருவாகும். அப்படி தான் சுக்கிரனும், செவ்வாயும் ஒருவருக்கொருவர் 4 ஆவது மற்றும் 10 ஆவது வீடுகளில் இருந்து கேந்திர திருஷ்டி யோகத்தை உருவாக்குகின்றனர்.
ஆடி பௌர்ணமியில் உருவாகும் இந்த யோகத்தால் சில ராசிக்காரர்கள் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறவுள்ளனர். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதை நாம் இங்கு பார்ப்போம்.

மேஷம்
ஆடி பௌர்ணமியில் செவ்வாய் சுக்கிரனால் உருவாகும் கேந்திர திருஷ்டி யோகத்தால் மேஷ ராசிக்காரர்களுக்கு மங்களகரமானதாக இருக்கும். புதிய வருமான வழிகள் உருவாகும் வாய்ப்புள்ளது. நீண்ட காலமாக சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும். ரியல் எஸ்டேட், ஃபேஷன் போன்றவற்றுடன் தொடர்புடைய தொழிலில் இருப்பவர்கள் நிறைய பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்பைப் பெறுவார்கள்.

ரிஷபம்
ஆடி பௌர்ணமியில் செவ்வாய் சுக்கிரனால் உருவாகும் கேந்திர திருஷ்டி யோகத்தால் ரிஷப ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியாக மிகவும் சிறப்பாக இருக்கும். பணியிடத்தில் தலைமைத்துவ திறன்கள் மேம்படும். சிலருக்கு பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. அரசு வேலை செய்பவர்கள் நல்ல செய்திகளைப் பெறலாம். ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றி கிடைக்கும்.

துலாம்
ஆடி பௌர்ணமியில் செவ்வாய் சுக்கிரனால் உருவாகும் கேந்திர திருஷ்டி யோகத்தால் துலாம் ராசிக்காரர்களுக்கு முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும். புதிய வீடு, வாகனம் வாங்கும் எண்ணம் இருந்தால், இக்காலத்தில் அதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கலாம். வாழ்க்கைத் துணையுடனான உறவு சிறப்பாக இருக்கும். எதிர்பாராத நிதி நன்மைகள் கிடைக்கும். இதனால் நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும்.

மகரம்
ஆடி பௌர்ணமியில் செவ்வாய் சுக்கிரனால் உருவாகும் கேந்திர திருஷ்டி யோகத்தால் மகர ராசிக்காரர்களின் நிதி நிலைமை வலுவடையும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். பணிபுரிபவர்கள் உடன் வேலை செய்வோரின் முழு ஆதரவைப் பெறுவார்கள். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். வேலை தொடர்பான பயணங்கள் நல்ல நிதி ஆதாயங்களைத் தரும்.
