தமிழர் பகுதியில் நேர்ந்த சோகம் ; ஐந்து மாதக் குழந்தைக்கு நேர்ந்த கதி
வவுனியா - கனகராயன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெடுங்கேணி, குளவிசுட்டான் கிராமத்தில் ஊஞ்சல் தடி முறிந்து விழுந்ததில் ஐந்து மாதக் குழந்தை ஒன்று சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
மேலதிக விசாரணை
குழந்தை தனது தாயுடன் ஊஞ்சலில் அமர்ந்திருந்த போது எதிர்பாராதவிதமாக ஊஞ்சல் தடி சரிந்து விழுந்துள்ளததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதில் படுகாயமடைந்த ஐந்து மாதக் குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் குழந்தையின் தாய் சிறுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
உயிரிழந்த குழந்தையின் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக கனகராயன்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.