6 வயது மகளை கழுத்தை அறுத்துக் கொன்ற தந்தை ; விரக்தியின் உச்சத்தில் நடந்தேறிய சம்பவம்
தனது 6 வயது சிறுமியின் கழுத்தை அறுத்துக் கொலை செய்த தந்தை மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை அயனாவரம், ஏகாங்கிபுரத்தைச் சேர்ந்த நபர் ஒருவர், பிரிந்து வாழும் மனைவி, தன்னிடமிருந்து மகளைப் பிரித்து விடுவாரோ என விரக்தியடைந்த நிலையில் தனது 6 வயது மகளைக் கொலை செய்துள்ளார்.
குடும்பப் பிரச்சினை
குடும்பப் பிரச்சினை காரணமாக, குறித்த நபரின் மனைவி காவல் நிலையத்தில் முறைப்பாடு அளித்த நிலையில், ஆலந்தூரில் உள்ள தங்கும் விடுதியில் வைத்து மகளைக் கொன்று, தனது உயிரையும் மாய்த்துக் கொள்ள அவர் முயற்சி செய்துள்ளார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில், அவரை மீட்ட காவல்துறையினர், சென்னை ராயப்பேட்டை அரச மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதையடுத்து, பரங்கிமலை காவல்துறையினர் மகளைக் கொலை செய்த வழக்கில் குறித்த நபரைக் கைது செய்தனர்.
மேலும், அவரை ஓகஸ்ட் 6ஆம் திகதி வரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு, ஆலந்தூர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளதாகத் தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.