நீங்க மட்டும் செல்லலாம் ; இந்திய கப்பல்களுக்கு ஹோர்மூஸ் நீரிணையை கடக்க ஈரான் அனுமதி
ஹோர்மூஸ் நீரிணையை கடக்க இந்திய கப்பல்களுக்கு ஈரான் அனுமதி அளித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. ஈரான் அமைச்சர் அராக்சியுடன் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேசிய நிலையில் இந்த அறிவிப்பை ஈரான் வெளியிட்டிருக்கிறது.
கடந்த சில நாட்களாகவே ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் தாக்கி வருகின்றன. ஒருபக்கம் அமெரிக்க ராணுவ படைகளுக்கு இடம் கொடுத்துள்ள குவைத், சவுதி அரேபியா, அபுதாபி, பஹ்ரைன் உள்ளிட்ட வளைகுடா நாடுகளின் மீது ஈரான் தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது.

ஹார்மூஸ் ஜலசந்தி முடப்பட்டதால் நெருக்கடி
மேலும், இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கும் கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் கப்பல் வழித்தடமான ஹார்மூஸ் ஜலசந்தியை ஈரான் அரசு மூடிவிட்டது. இதன் காரணமாக இந்தியாவில் கடந்து சில நாட்களாகவே கேஸ் தட்டுப்பாடு நிலவுகிறது.
இதன் காரணமாக தமிழகத்தில் பல சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் ஹோட்டல்கள் மூடும் நிலை ஏற்பட்டது. ஒருபக்கம் பெட்ரோலும் இனிமேல் கிடைக்காது என்கிற வதந்தி உருவானதால் பலரும் தண்ணீர் கேனையெல்லாம் தூக்கிக்கொண்டு பெட்ரோல் பங்குக்கு சென்று பெட்ரோல் வாங்கி நிரப்பி வருகிறார்கள்.
இந்நிலையில் , ஹோர்மூஸ் நீரிணையை கடக்க இந்திய கப்பல்களுக்கு ஈரான் அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.