போதையில் முச்சக்கர வண்டியில் சாகசம் ; இளைஞனுக்கு பொலிஸார் காட்டிய அதிரடி
கட்டுக்கஸ்தோட்டை பிரதேசத்தில் மிகவும் ஆபத்தான முறையில் முச்சக்கரவண்டி ஓட்டும் காணொளி சமூக ஊடகங்களில் பரவியதையடுத்து, சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் வீதிப் பாதுகாப்புப் பொறுப்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை (10) கட்டுக்கஸ்தோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு இந்த சம்பவம் தொடர்பில் அறிவிக்கப்பட்டதை அடுத்து பொலிஸார், கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதாக சந்தேகிக்கப்படும் 26 வயது இளைஞரை இவ்வாறு கைது செய்துள்ளனர்.

பாரதூரமான குற்றச்சாட்டு
கைது செய்யப்பட்ட பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், குறித்த சந்தேகநபர் போதைப்பொருளை பயன்படுத்தியுள்ளார் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று குறித்த சந்தேகநபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு எதிராக பல பாரதூரமான குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்தமைக்காக பொதுமக்களுக்கு தனது நன்றியைத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்திலும் இவ்வாறான ஆபத்தான வாகன ஓட்டங்கள் மற்றும் வீதி விதிகளை மீறுதல் தொடர்பில் பொதுமக்கள் வழங்கும் தகவல்களின் அடிப்படையில் தாமதமின்றி சட்டம் அமுல்படுத்தப்படும் என்றும் வலியுறுத்தினார்.