138 நாட்கள் கழித்து வக்ர நிவர்த்தி அடையும் சனிபகவான்: இவர்களுக்கு கஷ்ட காலம் முடிவுக்கு வரப்போகுது
ஜோதிடத்தில் நீதிமான் என்று அழைக்கப்படுபவர் சனி பகவான். சனி பகவான் டிசம்பர் மாதத்தில் வக்ர நிவர்த்தி அடையவுள்ளார். சுமார் 138 நாட்கள் வக்ர நிலையில் இருந்த சனி பகவான் டிசம்பர் 11 ஆம் திகதி வக்ர நிவர்த்தி அடைந்து நேர்கதியில் பயணிக்கவுள்ளார்.
இப்படி சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால், அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். அதுவும் சில ராசிக்காரர்கள் இந்த சனி பகவானின் ஆசியால் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறவுள்ளனர்.

அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள்
மகரம்: மகர ராசியின் 3 ஆவது வீட்டில் சனி பகவான் வக்ர நிவர்த்தி அடையவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு டிசம்பர் முதல் வாழ்க்கையில் பெரிய அளவில் நல்ல மாற்றங்களைக் காணக்கூடும். ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றியைப் பெறக்கூடும். வணிகர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. முக்கியமாக இதுவரை சந்தித்து வந்த பணப் பிரச்சனைகள் குறைந்து, நல்ல நிதி ஆதாயங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.
ரிஷபம்: ரிஷப ராசியின் 11 ஆவது வீட்டில் சனி பகவான் வக்ர நிவர்த்தி அடையவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும். சிலருக்கு எதிர்பாராத அளவில் நிதி நன்மைகள் கிடைக்கும். இதன் மூலம் நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பல புதிய வழிகளில் இருந்து பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். இதுவரை தேவையற்ற செலவுகளை அதிகம் சந்தித்து வந்தால், டிசம்பர் முதல் செலவுகள் கட்டுப்பட்டு நிறைய பணத்தை சேமிக்க முடியும்.
துலாம்: துலாம் ராசியின் 6 ஆவது வீட்டில் சனி பகவான் வக்ர நிவர்த்தி அடையவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு வாழ்க்கை மிகவும் அற்புதமாக இருக்கும். நல்ல நிதி ஆதாயங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் வழங்கப்படலாம். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் வேலை வாய்ப்புகள் தேடி வரும். செல்வாக்குமிக்கவர்களின் நட்பு கிடைக்கும். இதன் மூலம் சமூகத்தில் நல்ல உயரத்தை அடைவீர்கள்.