அக்குரஸ்ஸ குற்றத் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி பணி நீக்கம்
அக்குரஸ்ஸ பொலிஸ் நிலையத்தின் குற்றத் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரியைப் பணியிலிருந்து நீக்குவதற்குப் பொலிஸ் மா அதிபர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் பல பெண்களுடன் தொடர்பு வைத்திருந்தமை உள்ளிட்ட பல ஒழுக்கக்கேடான குற்றச்சாட்டுகள் தொடர்பில் அவருக்கு வழங்கப்பட்ட குற்றப்பத்திரிகை தொடர்பான விசாரணையில், அவர் அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, குறித்த உப பொலிஸ் பரிசோதகர் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
மேலும், கடந்த ஏப்ரல் மாதம் சிங்களப் புத்தாண்டு தினத்தன்று அக்குரஸ்ஸவில் நடைபெற்ற புத்தாண்டு விருந்தொன்றில் கலந்துகொண்ட சிலரைக் கைது செய்து, அவர்களிடமிருந்த 5 லட்சம் ரூபாய் பணத்தைக் கொள்ளையடித்ததாகவும் இவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.