யாழில் இரவோடிரவாக நடந்தேறிய சம்பவத்தால் பரபரப்பு ; இரு இளைஞர்களுக்கு சம்பவம் செய்த ஊரவர்கள்
யாழ்ப்பாணத்தில் ஆட்டினை திருடி , முச்சக்கர வண்டியில் கொண்டு சென்ற இருவரை ஊரவர்கள் மடக்கி பிடித்து , பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்
வேலணை பகுதியை சேர்ந்த நபர் ஒருவரின் வளர்ப்பு ஆடு காணாமல் போயுள்ளதாக , ஆட்டின் உரிமையாளர் தேடி வந்துள்ளார்.

மேலதிக விசாரணை
அந்நிலையில் , இரவு நேரம் சந்தேகத்திற்கு இடமான முறையில் அப்பகுதியில் பயணித்த முச்சக்கர வண்டியினை ஊரவர்கள் தடுத்து நிறுத்திய வேளை , காணாமல் போன ஆடு முச்சக்கர வண்டிக்குள் காணப்பட்டுள்ளது.
அதனை அடுத்து முச்சக்கர வண்டியில் பயணித்தவர்களிடம் ஊரவர்கள் விசாரணைகளை முன்னெடுத்த வேளை , மதியமே ஆட்டினை திருடி பற்றைக்காடு ஒன்றில் மறைவாக கட்டி வைத்திருந்ததாகவும் , அதனை தாம் தற்போது அங்கிருந்து கொண்டு செல்வதாகவும் கூறியுள்ளனர்.
அதனை தொடர்ந்து , ஊர்காவற்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து , சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிசாரிடம் , இரு இளைஞர்களையும் , அவர்களால் திருடப்பட்ட ஆட்டினையும் , அதனை கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட முச்சக்கர வண்டியினையும் பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.