கோவிலுக்குள் அரங்கேறிய சம்பவம் ; சிறுமிகளிடம் பூசாரி செய்த தகாத செயலுக்கு கிடைத்த பெரும் தண்டனை
உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவில் உள்ள ஒரு கோவிலில் சியாம் பிகாரி என்பவர் பூசாரியாக வேலை செய்து வந்தார்.
இவர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த இளம்பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து வெளிநாட்டிற்கு விற்பனை செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது இதையடுத்து கடந்த 2025 ஜூன் 17 அன்று மத்திய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பூசாரி சியாம் பிகாரி மீது வழக்கு பதிவு செய்தனர்.

ஆயுள் தண்டனை
இதைத்தொடர்ந்து ஜெயின்ட் காவல் நிலைய பகுதிக்குட்பட்ட ஒரு கிராமத்தில் உள்ள கோவிலில் இருந்து, பூசாரி சியாம் பிகாரியை புலனாய்வு அதிகாரிகள் கைது செய்தனர்.
நடத்தப்பட்ட விசாரணையில், சிறுமிகளுக்கு கோவில் பிரசாதம் தருவதாக கூறி பூசாரி அவர்களை ஓர் அறைக்குள் அழைத்து சென்று வீடியோ எடுத்தது தெரியவந்தது.
பின்னர் அந்த வீடியோக்களை வெளிநாட்டில் உள்ள நபர்களுக்கு ஆன்லைன் மூலம் பூசாரி விற்பனை செய்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
குற்றப்பத்திரிக்கை தாக்கல் இதையடுத்து 2025 ஆகஸ்ட் 18 அன்று பூசாரி சியாம் பிகாரி மீது புலனாய்வு பிரிவு அதிகாரிகள் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தனர்.
ஆயுள் தண்டனை அப்போது நீதிபதி, குற்றவாளி சியாம் பிகாரிக்கு ஆயுள் தண்டனை விதித்து அபராத தொகையாக ரூபாய் 1.43 லட்சம் செலுத்தும்படியும் உத்தரவிட்டார்.