சுற்றுலா விடுதியில் பொலிஸார் அட்டூழியம்
கொழும்பு, வாழைத்தோட்டம் பிரதேசத்தில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றுக்குச் சென்று அங்கிருந்த இரண்டு பணியாளர்களை தாக்கி காயப்படுத்திய இரு பொலிஸ் கான்ஸ்டபிள்கள் வாழைத்தோட்டம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்கள் கொழும்பு மத்திய குற்றத் தடுப்பு பிரிவில் கடமையாற்றும் இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்கள் ஆவர்.
பணியாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி
இரு பொலிஸ் கான்ஸ்டபிள்களும் கடந்த 12 ஆம் திகதி கொழும்பு, வாழைத்தோட்டம் பிரதேசத்தில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றுக்குச் சென்று அங்கிருந்த பணியாளர்களிடம் கைடயக்கத் தொலைபேசிகளை கேட்டு மிரட்டியுள்ளனர்.
இதன்போது இரண்டு பணியாளர்களும் தங்களது கைடயக்கத் தொலைபேசிகளை தருவதற்கு மறுப்பு தெரிவித்துள்ளதால் கான்ஸ்டபிள்கள் ணியாளர்களை தாக்கியதில் காயமடைந்த இரண்டு பணியாளர்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் வாழைத்தோட்டம் பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேக நபர்களான இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்களும் கைதுசெய்யப்பட்டு மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.