யாழில் பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சிறுவன் வழக்கில் புதிய திருப்பம்

Sri Lanka Police Jaffna Kilinochchi Court of Appeal of Sri Lanka
By Sahana Feb 11, 2026 10:00 PM GMT
Report

யாழ்ப்பாணத்தில் பொலிசாரின் கட்டளையை மீறி சென்ற வாகனத்தில் பயணித்த இருவரையும் 25 ஆயிரம் ரூபாய் ரொக்க பிணையிலும் தலா 2 ஆள் பிணையிலும் செல்ல ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்று அனுமதித்துள்ளது.

போதைப்பொருள் கடத்தல் ; கள்ள காதலியின் 2 கோடி பெறுமதியான வீடு முடக்கம்

போதைப்பொருள் கடத்தல் ; கள்ள காதலியின் 2 கோடி பெறுமதியான வீடு முடக்கம்

அல்லைப்பிட்டி பகுதியில் பொலிசாரின் கட்டளையை மீறி பயணித்த வாகனம் மீது பொலிஸார் நேற்றைய தினம் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ள நிலையில், வாகனத்தில் பயணித்த இருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தனர்

யாழில் பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சிறுவன் வழக்கில் புதிய திருப்பம் | New Twist Case The Boy Who Died Police Fire Jaffna

கைது செய்யப்பட்ட இருவரையும் விசாரணைகளின் பின்னர் நேற்றைய தினம் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தியவேளை, அவர்களை எதிர்வரும் 24ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டது.

இந்நிலையில் குறித்த இருவர் சார்பிலும் முன்னிலையான சட்டத்தரணி இன்றைய தினம் நகர்த்தல் பத்திரம் ஊடாக வழக்கினை மன்றில் மீண்டும் விசாரணைக்கு எடுத்து, பிணை விண்ணப்பம் செய்ததனை அடுத்து இருவருக்கும் நீதிமன்று பிணை வழங்கியுள்ளது.

இதேவேளை, துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான ஹயஸ் வாகனத்தை வவுனியாவில் உள்ள நபர் ஒருவரிடம் இருந்து தாம் புதிதாக கொள்வனவு செய்ததாகவும், கிளிநொச்சி உமையாள்புரம் பகுதியில் தமக்கு சொந்தமான வயலில் நெல் அறுவடை செய்வதற்காக வேலணை பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் வேலையாட்களை ஒழுங்குபடுத்தி தருவதாக கூறியதால், அவரை ஏற்ற சென்ற வேளையே சம்பவம் இடம்பெற்றதாக கைதான இருவரும் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், உயிரிழந்த சிறுவனின் சிறிய தந்தை தான் முன்னதாக வாகனத்தை ஓடியதாகவும், தீவு பகுதியில் வீதியில் சிறுவன் தான் வாகனம் ஓட விரும்பி கேட்டபோது வாகனத்தை வழங்கிய நிலையில், வாகனத்தை ஓட்டி சென்றவேளை அல்லைப்பிட்டி பகுதியில் பொலிஸார் மறித்தபோது வாகனத்தை நிறுத்தாது தொடர்ந்து செலுத்தினார்.

யாழில் பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சிறுவன் வழக்கில் புதிய திருப்பம் | New Twist Case The Boy Who Died Police Fire Jaffna

அவ்வேளை மண்டைதீவு பொலிஸ் காவலரணில் நின்ற பொலிஸார் வாகனத்தை மறிக்க தயாராக இருந்தவேளை, மீண்டும் வாகனத்தை அல்லைப்பிட்டி பக்கம் நோக்கி திருப்பியவேளை எம்மை பின் தொடர்ந்து வந்த பொலிஸார் எமது வாகனத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினார்கள்.

ஒரே ஒரு துப்பாக்கி சூட்டு சத்தம் மாத்திரமே எமக்கு கேட்டது. அதன் போதே பெறாமகன் வீதியோரமாக வாகனத்தை நிறுத்தி மயங்கி சரிந்தார். பின்னர் பொலிஸார் அவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதுடன் , எம்மை கைது செய்து பொலிஸ் நிலையம் கொண்டு சென்று விட்டனர்.

வாகனத்தில் இருந்த சாணகம், கயிறு, வாள், வாகனத்தில் விழுந்துள்ள துப்பாக்கி சூடுகள் பற்றி எவையும் எமக்கு தெரியாது என தெரிவித்துள்ளனர். அத்துடன் உயிரிழந்த சிறுவனின் இறுதி கிரியைகள் நாளைய தினம் வட்டுக்கோட்டையில் நடைபெறவுள்ளதாக தெரியவருகின்றது. 

அமெரிக்காவிற்குள் நுழைய சமூக வலைத்தள கணக்குகள் கட்டாயம்!

அமெரிக்காவிற்குள் நுழைய சமூக வலைத்தள கணக்குகள் கட்டாயம்!

மரண அறிவித்தல்

மானிப்பாய், Gagny, France

15 May, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
நன்றி நவிலல்

கோப்பாய் வடக்கு, கனடா, Canada

12 Apr, 2026
நன்றி நவிலல்

உரும்பிராய் மேற்கு, கோப்பாய் தெற்கு

14 Apr, 2026
நன்றி நவிலல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Scarborough, Canada

14 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, Muscat, Oman, நியூ யோர்க், United States, Boston, United States

14 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, London, United Kingdom

15 May, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், London, United Kingdom

13 May, 2013
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Kent, United Kingdom

09 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US