வடக்கை உலகத்தரம் வாய்ந்த சுற்றுலா மையமாக மாற்றும் திட்டம்
வடக்கின் சுற்றுலாத்துறையை உலகத்தரம் வாய்ந்ததாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண சுற்றுலாப் பணியகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிகபீடம் ஆகியவற்றுக்கு இடையில் இந்த விடயம் தொடர்பில் விசேட கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது, வடக்கில் 400 இற்கும் மேற்பட்ட சுற்றுலாத் தளங்களை மேம்படுத்துவதற்கு பல்கலைக்கழகத்தின் நிபுணத்துவத்தைப் பயன்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் முகாமைத்துவப் பாடத்திட்டத்தை சர்வதேச தரத்திற்கு ஏற்ப நவீனப்படுத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில், சுற்றுலாத்துறையில் மாணவர்களுக்கு நேரடி களப்பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புகளை உறுதி செய்வதற்கும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.