ரூ.3,902 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல்
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழுவுக்குச் சொந்தமானது என உறுதிப்படுத்தப்பட்ட ரூ.3,902 கோடி மதிப்புள்ள சொத்துக்களைப் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர் எஃப்.யு.கே. வூட்லர் தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றபோது அவர் இத தகவலை கூறினார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
அதன்படி 2025 ஆம் ஆண்டு வரை 73 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழுவின் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்குச் சொந்தமான 354 பவுண் தங்கம், 72 வாகனங்கள், 35 வீடுகள் மற்றும் 37 ஏக்கர் காணி அடங்குவதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் இது தவிர, 67 கோடி ரூபாய் பணமும் அவற்றில் உள்ளதாக அவர் மேலும் கூறினார்.