நான்கு பச்சிளம் பிள்ளைகளையும் தவிக்கவிட்டு கள்ளக்காதலனுடன் சென்ற தாய் கைது
12 வயதுக்குட்பட்ட தனது நான்கு பிள்ளைகளையும் கைவிட்டு, மற்றுமொரு நபருடன் சென்ற குற்றச்சாட்டில் தாயொருவரும் அவருக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும் நபரும் வெல்லவாய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஐரோப்பாவை உலுக்கும் அரசியல் கொந்தளிப்பு ; அச்சத்தில் புலம்பெயர் ஈழத்தமிழர்கள் ; இலங்கைப் பொருளாதாரம் பாதிப்படையுமா?
குறித்த கைது நடவடிக்கை நேற்று (03) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகள்
மொனராகலை வெல்லவாய பிரதேச செயலகத்தில் நடைபெற்ற சிறுவர் குழுக் கூட்டத்தில் கிடைத்த தகவலின் அடிப்படையில், பிள்ளைகளின் தந்தையை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வாக்குமூலம் பதிவு செய்தபோதே இந்தச் சம்பவம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

கைது செய்யப்பட்ட 30 வயதுடைய தாய், 29 வயதுடைய நபருடன் ஏற்பட்ட தொடர்பைத் தொடர்ந்து, கடந்த 02.09.2026 முதல் தனது நான்கு பிள்ளைகளையும் கைவிட்டுவிட்டு அவருடன் வாழ்ந்து வந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தனது மூத்த மகள் பாடசாலை முடிந்து வீடு திரும்பியதும், ஏனைய பிள்ளைகளை அவரிடம் ஒப்படைத்துவிட்டு தான் செங்கல் அறுக்கும் தொழிலுக்குச் செல்வதாக பிள்ளைகளின் தந்தை பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
தாய் பிள்ளைகளைக் கைவிட்டுச் சென்றதையடுத்து, அவர்களின் பாதுகாப்பு, பராமரிப்பு மற்றும் ஆரோக்கியம் தொடர்பில் பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கைவிடப்பட்ட நான்கு பிள்ளைகளில் 12 மற்றும் 04 வயதுடைய இரு சிறுமிகளும், ஒரு வயதும் மூன்று மாதங்களும் நிரம்பிய இரட்டை ஆண் குழந்தைகளும் அடங்குகின்றனர்.
கைது செய்யப்பட்ட தாயும் அவருடன் தொடர்புடைய 29 வயதுடைய நபரும் வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
வெல்லவாய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தினேஷ் ரத்நாயக்க தலைமையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.