தனியார் தொலைக்காட்சிக்கு 10 கோடி ரூபாய் அரச நிதி?
சுற்றுலா மேம்பாட்டிற்காக எனக் கூறி 10 கோடி ரூபாய் அரசாங்கப் பணத்தை நாட்டின் தனியார் தொலைக்காட்சி அலைவரிசை ஒன்று நடத்தும் மாநாடு ஒன்றுக்கு வழங்கியமை குறித்து உரிய விசாரணை நடத்துமாறு கோரி இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஐரோப்பாவை உலுக்கும் அரசியல் கொந்தளிப்பு ; அச்சத்தில் புலம்பெயர் ஈழத்தமிழர்கள் ; இலங்கைப் பொருளாதாரம் பாதிப்படையுமா?
'ஜனநாயகத்திற்கான சமூக ஊடக செயற்பாட்டாளர்களின் சங்கம்' இன்று (03) இந்த முறைப்பாட்டை சமர்ப்பித்துள்ளது.

எவ்வாறாயினும், இது தொடர்பாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்குப் இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் பதிலளித்த அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ, குறித்த தனியார் அலைவரிசைக்கு ஒதுக்கப்பட்ட பணம் அரசாங்கத்தின் வரிப்பணம் அல்லவென்றும், அது சுற்றுலா அபிவிருத்திப் பணியகத்தின் பணம் என்றும் தெரிவித்தார்.
ஆசிய-பசிபிக் பிராந்திய ஒளிபரப்புச் ஒன்றியத்தின் (ABU) 63 ஆவது மாநாடு கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பங்கேற்புடன் நடைபெற்றது. அந்த மாநாட்டை நடத்துவதற்கும், அது தொடர்பான கூட்டங்கள், இசை நிகழ்ச்சிகள் மற்றும் சுற்றுலா திட்டங்களுக்கு வரவேற்பளிப்பதற்கும் அரசாங்கம் 10 கோடி ரூபாய் பணத்தை நாட்டின் தனியார் தொலைக்காட்சி அலைவரிசை ஒன்றுக்கு வழங்கியதாகச் சமூகத்தில் தற்போது கடும் விவாதம் எழுந்துள்ளது.
இதற்கமைய, அரசாங்கப் பணத்தை இவ்வாறு தனியார் அலைவரிசை ஒன்றுக்கு வழங்கியதன் பின்னணி என்னவென்று கேள்வியெழுப்பி, ஜனநாயகத்திற்கான சமூக ஊடக செயற்பாட்டாளர்களின் சங்கம் இலஞ்சம், ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் இன்று இம்முறைப்பாட்டை அளித்தது.