விமல் வீரவன்சவுக்கு எதிரான விசாரணை 25ஆம் திகதி
அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில், சட்டபூர்வமான வருமானத்தை விட அதிகமாக 75 மில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான சொத்துக்களை முறைகேடாகச் சேர்த்துக் கொண்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில், முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் மேலதிக சாட்சிய விசாரணையை எதிர்வரும் 25ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (03) உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹாயில் முன்னிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, வழக்கின் முறைப்பாட்டுத் தரப்பு சாட்சிகளான 05, 55 மற்றும் 56ஆம் இலக்க சாட்சிகளை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு நீதிபதி அழைப்பாணை பிறப்பித்தார்.
இதேவேளை, இந்த வழக்கின் பிரதிவாதியான முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவும் இன்று திறந்த நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தார்.