யாழ்ப்பாணத்தில் தாயும் மகனும் செய்த மோசமான வேலை
யாழ்ப்பாணம் - ஏழாலை, தெற்கு மயிலங்காடு பகுதியில் 10 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சுன்னாகம் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே 27 வயதுடைய இளைஞன் நேற்று (30) கைது செய்யப்பட்டுள்ளார்.
தாயார் சிறையில்
குறித்த இளைஞன் ஏற்கனவே ஒரு தடவை போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட நிலையில் 6 மாதங்கள் சிறையில் இருந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
அந்த வழக்கும் இன்னமும் நிலுவையில் உள்ளதாகவும் அத்துடன் குறித்த இளைஞனின் தாயார் கடந்த ஒரு மாதத்துக்கு முன்னர் போதைப்பொருளுடன் கைதாகி சிறையில் உள்ளார் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந் நிலையில், குறித்த இளைஞன் ஞாயிற்றுக்கிழமை (30) கைது செய்யப்பட்டு சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்.
விசாரணைகளின் பின்னர் கைதான சந்தேக நபரை, மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.