அமெரிக்காவில் நிதி நெருக்கடி ; இலங்கையிலுள்ள தூதரகத்தின் பேஸ்புக் பதிவுகள் முடக்கம்
அமெரிக்க அரசாங்கத்திற்கு நிதி ஒதுக்குவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் காரணமாக அங்கு பகுதி அளவிலான அரசாங்க முடக்கம் (Government Shutdown) ஏற்பட்டுள்ளது.
இதன் தாக்கம் இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் செயற்பாடுகளிலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது.

இதற்கமைய தூதரகத்தின் உத்தியோகபூர்வ பேஸ்புக் (Facebook) பக்கத்தில் பதிவேற்றப்படும் நாளாந்த தகவல்கள் தற்காலிகமாகக் குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூதரகத்தின் முழுமையான பணிகள் மீண்டும் ஆரம்பமாகும் வரை, அவசர பாதுகாப்புத் தகவல்கள் (Safety and Security Information) மட்டுமே சமூக வலைத்தளங்களில் பகிரப்படவுள்ளன.
மேலும் ஏனைய வழக்கமான பதிவுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. அரசாங்க முடக்கம் ஏற்பட்ட போதிலும், இலங்கை உட்பட உலகம் முழுவதும் உள்ள அமெரிக்கத் தூதரகங்களில் கடவுச்சீட்டு (Passport) மற்றும் விசா (Visa) சேவைகள் வளங்கள் உள்ளவரை தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.