நாணய தாள்களை கால்களால் மிதித்த தியாகி ; நீதவானின் எச்சரிக்கையுடன் விடுதலை
மக்கள் மனம் கவர்ந்த தியாகி நாணய தாள்களை காலால் மிதித்து அகெளரவ படுத்திய குற்றச்சாட்டில் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டதை அடுத்து நேற்று (10) சரீர பிணையில் விடுதலையானார்.
தியாகி நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப் பட்ட போது அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நடந்த விடயம் தொடர்பில் தியாகி மன்னிப்பு கோருவதாகவும் பணத்தை அகெளரவப் படுத்தவதற்காக அவர் இச்செயலை செய்யவில்லை.
நோர்வே நாட்டில் இருந்து வரவேண்டிய பெருந்தொகைப் பணம் இவருக்கு கிடைக்காமல் போனமன வேதனை மன உளைச்சலில் இவ்வாறு நடந்து கொண்டதாகவும் பெரும்பாலான ஏழை மக்களுக்கு அவர்களின் தேவை கருதி பல்வேறு மனிதநேய உதவிகளை "தியாகி" வழங்கி வருவதாகவும நடந்த தவறுக்காக நீதிமன்றில் மன்னிப்பு கோருவதாகவும் அவரது சட்டத்தரணி தெரிவித்துள்ளார்
இதனையடுத்து இச்செயற்பாட்டை கண்டித்துள்ள நீதவான் 2 இலட்சம் ரூபா சரீரப் பிணைகள் இரண்டில் இவரை விடுதலை செய்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் வங்கி ஒன்றுக்கு அருகில் 5000 ரூபாவிலான 65000 ரூபா பணத்தை தனது கால்களால் மிதித்து பணத்தை அகெளரவப் படுத்தியதாக இவர் மீது குற்றஞ்சாட்டப் பட்டிருந்ததை குறிப்பிடத்தக்கதாகும்