Rebuilding Sri Lanka ; 10 மில்லியன் ரூபா வழங்கிய பெண்
டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான அரசாங்கத்தின் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு ஜனந்தி சந்தனிகா, தனது தனிப்பட்ட நிதியிலிருந்து 10 மில்லியன் ரூபாவை நன்கொடையாக வழங்கினார்.
அதற்கான காசோலையை அவர், இன்று (13) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் கையளித்தார்.

மக்களுக்கு நிவாரணம்
அதேவேளை டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான அரசாங்கத்தின் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு தனியார் நிறுவனமொன்றினால் 100 மில்லியன் ரூபா நன்கொடை வழங்கப்பட்டுள்ளது.
குறித்த காசோலையை அதன் தலைவர் இம்தியாஸ் புஹார்தீன்(Imtiaz Buhardeen) நேற்று (12) பிற்பகல் ஜனாதிபதிஅலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் கையளித்தார்.